முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சுயமரியாதைக்காரர் என்ற பெருமையைக் கொண்டவர் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கருணாநிதி சுயமரியாதைக்காரர் என்ற பெருமையைக் கொண்டவர். தனது வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டவர் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘சீறிப் பாய்ந்த SSLV-D1; சிக்னல் கிடைப்பதில் சிக்கல்?’
தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடலுக்கு மிகப்பெரிய முன்னோட்டமாகக் கருணாநிதி இருந்ததாகவும், தற்போது ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு கட்டிடமாக இருக்கிறதே தவிர மற்றவர்கள் சொல்வது போல வெற்று இடமாக இல்லை எனக்கூறிய அவர், கருணாநிதி மறையவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவர் மூலமாகத் தான் ஜனநாயகம், சமூகநீதி வாழ்ந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி புகழ் வாழ்க, வெல்க மாநில உரிமைகள் எனக் கூறினார்.








