ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில், பற்றிய எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த மலைப் பகுதியில் யானை, குரங்கு, செந்நாய், கருஞ்சிறுத்தை போன்ற வனவிலங்குகளும், பலவகையான
பறவை இனங்களும் வாழ்கின்றன.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் திடீர் நகர் அருகே தீப்பற்றியது. ஆடிக்காற்றின் வேகத்தில் மளமளவென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தீ பரவியது. தகவல் அறிந்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, தீயை அணைத்து வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் பலவகையான மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகின.







