ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி; இந்தியா – மலேசியா அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன.…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் மலேசியா அணி வலுவாக இருப்பதால் இன்றைய போட்டி இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

இதுவரை 6 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், புள்ளிப்
பட்டியலில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று மலேசியா முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் பெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், தென்கொரியா அணி ஒரு போட்டியில்
வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்து மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

நான்காவது இடத்தில் ஜப்பான், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளனர். ஆறாவது இடத்தில் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியை தழுவிய சீனா 0 புள்ளிகளுடன் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.