பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல, ஏப்ரல் ஆறாம் தேதிவரை வனத்துறை அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர…

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல, ஏப்ரல் ஆறாம் தேதிவரை வனத்துறை அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில், சித்தர்கள் எந்நேரமும் வழிபட்டு வருவதாக ஐதீகம் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என்று எட்டு நாட்கள் மட்டுமே, தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

அந்த வகையில், பங்குனி மாதப் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது.

இதனால், சாமி தரிசனம் செய்யக் குவிந்துள்ள ஏராளமான பக்தர்கள், அதிகாலை முதலே மலை ஏறி சென்று வழிபாடு செய்து வருகின்றனர். சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.