13 குழந்தைகளுக்கு பிறகும் கருத்தடைக்கு மறுத்தவர்: நீண்ட போராட்டத்திற்குப் பின் செய்யப்பட்ட சிகிச்சை!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் 13 குழந்தைகள் பெற்ற பின்னரும் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தவரால் மருத்துவக் குழுவினர் அவதியடைந்தனர். இறுதியாக காவல் மற்றும் வருவாய் துறையினரின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவருக்கு அறுவை…

ஈரோடு மாவட்டம் பர்கூரில் 13 குழந்தைகள் பெற்ற பின்னரும் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தவரால் மருத்துவக் குழுவினர் அவதியடைந்தனர். இறுதியாக காவல் மற்றும் வருவாய் துறையினரின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மலைக்கிராமங்களில் ஒன்றான ஒன்னக்கரையில் சின்னமாதையன் மற்றும் அவரது மனைவி சாந்தி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மகன்கள்,5 மகள்கள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 13வதாக சாந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது.இதனைதொடர்ந்து இவர்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முயற்சித்தனர்.

சாந்திக்கு ரத்த சோகை இருந்ததால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்வதில் சிரமம் இருந்தது. இதனால் சின்னமாதையனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்ன மாதையன் வனப்பகுதிக்குள் சென்று ஒழிந்து கொண்டார்.

மருத்துவக்குழுவினர் எவ்வளோ முயற்சித்தும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனைதொடர்ந்து காவல் மற்றும் வருவாய்த்துறையினரின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பின்னர் சின்ன மாதையன் அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டார். இதனையடுத்து சின்னமாதையனுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது.
—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.