முக்கியச் செய்திகள் தமிழகம்

2வது நாளாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளிமாநில மக்கள்; சென்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

இரண்டாவது நாளாக சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் வெளிமாநில மக்களால் சென்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்திலிருந்து வட மாநில மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கடந்த
இரண்டு நாட்களாக ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்தவகையில் நேற்று இரவு சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இரவு 10.15 மணிக்குப் புறப்பட்ட
ஆலப்புழா தன்பாத ரயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரயிலில் செல்ல இடம் இல்லாதோர் காலை 07.00 மணிக்கு செல்லும் கோரமண்டல்
எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக ஆயிரக் கணக்கான வட மாநில மக்கள் இரவு முழுக்க ரயில்
நிலையத்திலே தங்கியுள்ளனர்.

வடமாநில மாநில தொழிலாளர்களைத் தாக்கப் பட்டதாக வதந்தி பரவிய நிலையில் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து ,நாங்கள் வரும் 8 ஆம் தேதி எங்கள் ஊரில் நடக்கும்
ஹோலி பண்டிகைக்குச் செல்வதாகவும்.எங்களுக்கு இங்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என கூறினர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாகச் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் வெளிமாநில மக்களால் சென்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈரோடு இடைத்தேர்தல்: LiveUpdates

Jayasheeba

நீட் விவகாரம்: மசோதாவை மீண்டும் அனுப்ப தீர்மானம்

G SaravanaKumar

‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே’- விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோ

G SaravanaKumar