குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!

திருவொற்றியூரில் குடிநீர் ஆலைகள் மற்றும் தனியார் கடைகளில் தண்ணீரில் உள்ள குளோரின் அளவை பரிசோதிக்க தண்ணீரின் மாதிரிகள் சேமிக்கப்பட்டு, உரிமம் இல்லாமல் நடத்தி வந்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை, திருவொற்றியூர் அடுத்த…

திருவொற்றியூரில் குடிநீர் ஆலைகள் மற்றும் தனியார் கடைகளில் தண்ணீரில் உள்ள குளோரின் அளவை பரிசோதிக்க தண்ணீரின் மாதிரிகள் சேமிக்கப்பட்டு, உரிமம் இல்லாமல் நடத்தி வந்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை, திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் பஜனை கோயில் தெரு, கத்திவாக்கம்
நேதாஜி நகர், சத்தியமூர்த்தி நகர், அஜாக்ஸ் தேரடி உள்ளிட்ட 16 இடங்களில் உணவு
பாதுகாப்பு ஆணையர் லால் வினா ஐஏஎஸ் தலைமையில் அதிரடி சோதனை நடை பெற்றது. கோடை வெயிலில் தண்ணீர் பொது மக்களுக்கு முக்கிய தேவை. சுத்தம் இல்லாத குடிநீரை பொது மக்களுக்கு விநியோகிப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ், சந்திர போஸ் உணவு பாதுகாப்பு
அலுவலர் செல்வராஜ், துப்புரவு அலுவலர் அன்பழகன், சென்னை குடிநீர் வாரிய உதவி
செயற்பொறியாளர் வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் இச்சோதனையில் பங்கேற்றனர். குடிநீர் ஆலைகளில், குடிநீரீல் உள்ள கோளோயின் ஆர் சி அளவு குறித்து தெரிந்து கொள்ள குடிநீர் மாதிரிகளை சோதனைக்கு எடுத்துக் கொண்டனர்.

மேலும், விசாரணையில் குடிநீர் ஆலைகள் லைசன்ஸ் இல்லாமல் சட்டவிரோதமாக
நடத்துவது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக எச்சரித்து கடைகளில் சுகாதாரமற்ற
முறையில் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் டப்புகளை பறிமுதல் செய்து அழிப்பதற்கான
ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 தண்ணீர் ஆலைகளை ஆய்வு செய்ததில் அதிலிருந்து மாதிரிகளை கொண்டு சென்று பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த
கேன்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், அழியாத மையில் தேதி உள்ளிட்டவை குறித்து இருக்க வேண்டும் என்றும், விழாக்களில் பயன்படுத்தும் பாட்டில்கள் 15 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்றும், கேண்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை வீடுகளில் சேமித்து வைக்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

”டி என் புட் சேப்டி கன்ஸ்யூமர் ” என்ற ஆப் பிளே ஸ்டோரில் உள்ளதாகவும்
அதில் புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும்
அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.