27 C
Chennai
December 6, 2023
முக்கியச் செய்திகள் உலகம்

2023ல் இருந்து, 2022ம் ஆண்டுக்கு டைம் டிராவல் செய்த விமானம்!

விமான பயணம் 2023ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டில் அந்த பயணம் முடிந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே பயணங்கள் என்றால் நம் அனைவருக்கும் பிடித்ததே, அதுவும் மழைக்கால தொலைதூர பயணங்களில், ஜன்னலோர இருக்கை, சில்லென்ற தென்றல், இளையராஜா பாடல் என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்? இது ஒரு பக்கம் இருக்க, கால பயணம் அதாவது TIME TRAVELலை பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம், படங்களிலும் பார்த்துள்ளோம், இப்பொழுது அது சாத்தியமாகியுள்ளது,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பயணம், சூரரைப் போற்று, பெல் பாட்டம் என விமானத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இவை எதுவுமே கால பயணத்தை மையமாக வைத்து வரவில்லை. திரையில் அள்ளாமல், தரையிலேயே இது போன்ற ஒரு நிகழ்வு அரங்கேரியுள்ளது. ஜனவரி 1, 2023 ஆண்டு தென் கொரியாவை சேர்ந்த சியோல் மாகாணத்திலிருந்து புறப்பட்ட யுனைடட் ஏர்லைன்ஸ் போயிங் 777-300 எனும் விமானம், டிசம்பர் 31ம் தேதி 2022ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை அடைந்துள்ளது.இது எப்படி சாத்தியம் ஆனது என்பது உண்மையாக அறிவியல் மட்டுமே. இதன் அடிப்படை காரணம் நேர மண்டலம் தான்( TIME ZONE).  தென் கொரியாவின் TIME ZONE KST, அதாவது KOREAN STANDARD TIME, ஆனால் கலிபோர்னியாவின் நேர மண்டலமானது, பசிபிக் நேர மண்டலமாகும் (PAFIC STANDARD TIME). இதுவே இந்த கால பயணத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் இடையே இயங்கும் “INTERNATIONAL DATE LINE” நேரப் பயணத்தை ” செயல்படுத்துகிறது. விமானம் ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புறப்படும்போது முந்தைய மண்டலத்தை விட 23 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ள ஒரு மண்டலத்திற்குள் நுழைகிறது.

2 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகாயத்தில் இருந்த இந்த விமானம் பிரேசிலிய நேரப்படி 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, சனிக்கிழமை பிற்பகல் 2:43 மணிக்கு இருந்து புறப்பட்டு டிசம்பர் 31ம் தேதி 2022ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்குள் நுழைந்து ஒரு நிஜமான TIME TRAVEL அனுபவத்தை பயணிகளுக்கு கொடுத்தது. ஒன்று வாங்கினால் ரெண்டு இலவசம் என சொல்லுவது போல, ஒரு விமான டிக்கெட் வாங்கியவர்களுக்கு இரு புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொண்டாடும் அரிய வாய்ப்பை இந்த பயணம் வழங்கியது என்று கூறினால் மிகையல்ல.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy