கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கடற்பகுதியில் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் வரும் 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் ஏப்ரல், மே மாதங்களில், விசைப்படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன் பிடித்தால், அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இரண்டு மாத காலம் கடலில் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தடைக்காலம் அறிவிக்கப்பட்டதால், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது என மீனவர்கள் தெரிவித்தனர்.







