‘கங்குவா’ திரைப்படத்திடன் முதல் பாடல் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.  யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து…

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.  யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடந்து முடிந்தன. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியோல்,  ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர்  உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : அறுவை சிகிச்சை போது வீடியோ கேம் விளையாடிய நோயாளி – இணையத்தில் வைரல்!

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘கங்குவா’ முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.