வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்ரு திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. வழக்கமாக இரு நாடுகளில் தேசிய கீதம் பாடப்பட்டு மோட்டி தொடங்கும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு போட்டி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பாடப்பட்டுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணி விவரம்:
இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் (c), விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (wk), நமன் திர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா
வெஸ்ட் இண்டீஸ்: ஜான் கேம்ப்பெல், ஜஸ்டின் கிரீவ்ஸ், கீசி கார்ட்டி, ஷாய் ஹோப் (wk/c), அமீர் ஜங்கு, ஜூவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ்.




