முக்கியச் செய்திகள் இந்தியா

இலவச நாப்கீனை அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு

பீகாரில் இலவச நாப்கீன் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா என பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கேள்யெழுப்பியது சர்ச்சையாகியுள்ளது. 

பீகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரிடம் மாணவிகள் சிலர், எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இராது என கூறியுள்ளனர். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா? என்றும் கேட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர், இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள். முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள் என பேசியுள்ளார்.

ஏன் அரசிடம் இருந்து பொருட்களை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது? என கேட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி கவுர், இந்த எண்ணம் தவறானது என்றும் பேசியுள்ளார். இதற்கு மாணவிகள், தேர்தலின்போது வாக்குகளை பெற அரசு எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என பதிலடி கூறியுள்ளனர். அதற்கு கவுர், நீங்கள் வாக்களிக்காதீர்கள். (பாகிஸ்தானை போல) என குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்பின்பு ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்திற்காக கடுமையாக போராடிய நபர்களில் ஒருவர் என அறியப்படும் பெண் நான். சில சமூக விரோதிகள் என்னுடைய நன்மதிப்புகளை சீர்குலைக்கும் கீழ்த்தர முயற்சிகளில் இதுபோன்று ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ்குமார், உடனடியாக ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உதவுகிறோம். ஒவ்வொன்றையும் கண்காணித்து வருகிறேன். இந்த சம்பவத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரின் தைவான் பயணம்

Arivazhagan Chinnasamy

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியாகிறது ‘அண்ணா மேலாண்மை நிலையம்’

Halley Karthik

ட்விட்டர் புளூ டிக் சேவை நிறுத்தம்- எலான் மஸ்க்

G SaravanaKumar