இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்….

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக காவிரி மேலாண்மை…

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.