தைவான் நாட்டில் நேற்று நடந்த தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள காவோசியங் நகரில், வணிக வளாகத்துடன் கூடிய 13 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது.
இதனால் அதில் சிக்கி இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 41 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.








