வேளச்சேரி 8 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : போராடி தீயை அணைத்த வீரர்கள்!

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்படடது. சென்னை வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே புதியதாக 8 அடுக்கு மாடி கொண்ட உணவகம் கட்டும் பணி…

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்படடது.

சென்னை வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே புதியதாக 8 அடுக்கு மாடி கொண்ட உணவகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாம் தளத்தில் கார்பெண்டர் பணி நடைபெற்று வருகிறது. அப்போது திடீர் மின் கசிவால் மூன்றாம் தளத்தில் தீ பிடித்தது. இந்த தீ விபத்தால் வேளச்சேரி பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக மாறியது
இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் இனனல்களை எதிர்கொண்டனர். இதனையடுத்து மேடவாக்கம், வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணப்பு வண்டிகளில் சென்ற தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்டிட மேல் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு வட மாநில இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர் அவர்களை ஸ்கை லிட் வாகன மூலம் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு இருந்த ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.