தற்போது வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் பார்க்க கூடிய படங்களாக இல்லை என இயக்குநர் தங்கர்பச்சன் தெரிவித்தார்.
தங்கர் பச்சன் இயக்கிய “கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தை படக்குழுவினர் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர். குறிப்பாக தங்கர் பச்சன் மற்றும் படத்தில் நடித்த பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு,
அதிதி பாலன் உள்ளிட்டோர் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் தங்கர்பச்சன், குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரிவினைகளை எடுத்துரைக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக செல்போனில் மூழ்கி இருக்கும் பிள்ளைகள், பெற்றோர்கள் உறவுகள் இதனால் ஏற்பட்டிருக்கும் பிரிவினைகள் அனைத்தையும் எடுத்துரைக்கும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம். என் மனதில் இருக்கும் முழுவதையும் படத்தில் காண்பித்துள்ளேன் இவ்வாறு தங்கர்பச்சான் கூறினார்.
இதனை அடுத்து இத்திரைப்படத்தில் நடித்த இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா பேசியதாவது:
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் உறவுகளையும் எடுத்துரைக்கும் படம் இது. அனைவரும் குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குடும்ப படம் வந்துள்ளது. தங்கர் பச்சன் இந்த படத்தை அழகாக வடிவமைத்துள்ளார். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.







