பைக் டூரை சமீபத்தில் முடித்த நடிகர் அஜித், தற்போது சைக்கிள் டூர் கிளம்பிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.
சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.
இப்படியான சூழ் நிலையில் எப்போதும் பைக்கில் டூர் செல்லும் அஜித், இந்த முறை சைக்கிளில் கிளம்பிவிட்டார். ஒயிட் ஷர்ட், தலையில் ஹெல்மெட் அணிந்து அஜித் சைக்கிள் ஓட்டும் இந்த போட்டோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.







