ரஜினியின் காளி, கர்ஜனை பட தயாரிப்பாளர் காலமானார்..!

திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களை தயாரித்தவர் ஹேம் நாக்…

திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களை தயாரித்தவர் ஹேம் நாக் பாபுஜி . 76 வயதாகும் இவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

ஹேம் நாக் என்ற தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர், சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார். மேலும் 1999-ஆம் ஆண்டு 14 இயக்குனர்களை கொண்டு , விஜயகுமார், மஞ்சுளா, கார்த்திக், பிரபு, பிரபு தேவா, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், அர்ஜுன், ஊர்வசி என மிகப்பிரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்ற நகைச்சுவை படமான சுயம்வரம் திரைப்படத்தினை தயாரித்தவர் என்ற பெருமையும் ஹேம் நாக் பாபுஜிக்கு உண்டு. இப்படம் எல்லோரின் ஏகோபித்த பாரட்டையும், வரவேற்பையும் பெற்ற படமாக இன்றும் இருந்து வருகிறது.

இப்படி பல சிறப்புமிக்க படங்களை தயாரித்தவர் என்ற பெருமைகளை கொண்ட ஹேம் நாக் பாபுஜி உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அண்மையில், பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், இயக்குனர் டி.பி.கஜேந்திரன் ஆகியோரின் மறைவை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜியும் மறைந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.