தனுஷின் ‘D54’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தனுஷின் ‘D54’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகராக கலக்கி வந்த தனுஷ் கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

தனுஷின் 50-வது படமாக உருவான ‘ராயன்’ திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தனுஷ் ‘குபேரா’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கினார். இதற்கிடையே, தனுஷ் தனது 52வது படமான ‘இட்லி கடை’ படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

https://x.com/VelsFilmIntl/status/2002635268353077305

நடிகர் தனுஷ் கடைசியாக நடித்த ‘தேரே இஷ்க் மே’ படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. இதனையடுத்து அவர் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், தற்காலிகமாக ‘D54’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.