Thalapathy69 | புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம், திரையரங்குகளில்…

film team , technical crew ,Vijay, movie ,Thalapathi 69, HVinod

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் நேற்று (அக்.3ம் தேதி) வெளியானது. ‘கோட்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி திரைப்படத்தில் இயக்குநர் வினோத்துடன் கைக்கோர்த்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு கடந்த 1ம் தேதி முதல் வெளியாகி வருகிறது.இதுவரை இப்படத்தில் நடிகர் பாபி தியோல், நடிகை பூஜா ஹெக்டே, மலையாள நடிகை மமிதா பைஜு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படியுங்கள் : பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!

இந்நிலையில், ‘தளபதி 69’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் இணைந்துள்ளார். சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, கலை இயக்குநராக செல்வகுமார், படத்தொகுப்பாளராக பிரதீப் ஈ.ராகவ், ஆடை வடிவமைப்பாளராக பல்லவி ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.