‘ஓஎம்ஜி 2’ படத்தின் 2-வது பாடலை வெளியிட்ட படக்குழு – உற்சாகமான அக்ஷய் குமார் ரசிகர்கள்!

‘ஓஎம்ஜி 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹர் ஹர் மகாதேவ்’ பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்பாடல் அக்ஷய் குமார் ரசிகர்கள் மத்தியில் நலன் வரவேற்பை பெற்றுள்ளது. அக்‌ஷய் குமார் மற்றும் பங்கஜ் திரிபாதியின்…

‘ஓஎம்ஜி 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹர் ஹர் மகாதேவ்’ பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்பாடல் அக்ஷய் குமார் ரசிகர்கள் மத்தியில் நலன் வரவேற்பை பெற்றுள்ளது.

அக்‌ஷய் குமார் மற்றும் பங்கஜ் திரிபாதியின் ‘ஓ மை காட் 2’ (OMG 2) திரைப்படம், நையாண்டி, நகைச்சுவை நாடகம் ஆகியவற்றை மையமாக கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படமான ‘OMG அதாவது ஓ மை காட் படத்தின் தொடர்ச்சி ஆகும். அமித் ராய் இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார் சிவபெருமானின் அவதாரத்தில் நடித்துள்ளார். ‘OMG 2’ படத்தில் யாமி கெளதம், பங்கஜ் திரிபாதி மற்றும் ராமாயண புகழ் அருண் கோவில் ஆகியோரும் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் ஊஞ்சி ஊஞ்சி வாடி என்ற முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘ஓ மை காட் 2’ படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 27ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகப் போகும் தகவலை நேற்று நடிகர் அக்ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவபெருமானின் அவதாரத்தில் காட்சியளிக்கும் பாடலின் போஸ்டரை வெளியிட்டு பகிர்ந்திருந்தார். அதில் அவர் பெரிய முடி, முகத்தில் சாம்பல் மற்றும் கையில் பறையுடன் காணப்பட்டார். இதனை கண்ட அவரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து OMG 2 இன் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. ஹர் ஹர் மகாதேவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலில், அக்‌ஷய் குமார் சிவபெருமானின் முகத்திலும் உடலிலும் சாம்பலைப் பூசிக்கொண்டு அவரது புகழ்பெற்ற தாண்டவ நடனம் ஆடுகிறார்.

படக்குழு வெளியிட்டுள்ள ஹர் ஹர் மஹாதேவ் பாடல் வீடியோவில், சிவ பக்தர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும், பாரம்பரிய உடைகள் மற்றும் முகத்தில் சாம்பல் பூசி, சிவனின் தாண்டவ நடனத்துடன் ஆட, உயரமான மேடையில் இருந்து அவர்கள் நடனமாடுவதைப் பார்த்துவிட்டு, அக்ஷய் இறுதியாக தனது சொந்த தாண்டவ நடனத்தைக் காட்ட கூட்டத்தில் குதிக்கிறார். இந்த பாடலை விக்ரம் மாண்ட்ரோஸ் என்பவர் இசையமைத்து பாடியுள்ளார். சேகர் அஸ்தித்வா எழுதியுள்ளார்.

‘ஓ மை காட் 2’ (OMG 2) திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு எந்தவிதமான பிரச்னையும் வந்துவிட கூடாது எப்பதற்காக படம் ஏற்கனவே மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) அனுப்பப்பட்டுள்ளது. படத்தினை பார்த்த சென்சார் போர்டு, சர்ச்சைக்குரிய 15-20 காட்சிகளை எடுத்துவிட பரிந்துரைத்துள்ளதாகவும், இதனுடன், படத்திற்கு வயது வந்தோருக்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்பதால் சென்சார் போர்டின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.