2026-உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் 3 நாடுகளில் நடைபெறவுள்ளதாக ஃபிபா அறித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதற்கான வாக்கெடுப்பை உலகக் கோப்பை கால்பந்தாட்ட சம்மேளனமான பிஃபா ஜூன் 13ஆம் தேதி மாஸ்கோவில் நடத்தியது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வாய்ப்பு பிஃபா பொதுக் குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி வழங்கப்படும். போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள நாடுகள், அவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகள், செலவிடும் தன்மை போன்றவற்றை பொருத்து வாய்ப்பு கிடைக்கும். வரும் 2022ஆம் ஆண்டு போட்டி கத்தாரில் நடக்கிறது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்த மொராக்கோவும், அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்திருந்தன. இதில், அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் போட்டிகளை நடத்தவுள்ளதாக பிஃபா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 11 இடங்களிலும், மெக்ஸிகோவில் 3 இடங்களிலும், கனடாவில் இரண்டு இடங்களிலும் கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
80 போட்டிகளில் 60 போட்டிகளை அமெரிக்கா நடத்தவுள்ளது. ஆனால், எந்தெந்த மைதானங்கள் நாக் அவுட் சுற்றுகளில் போட்டிகளை நடத்தும் என்பதை ஃபிஃபா இன்னும் அறிவிக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற ரோஸ் பவுல் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சோஃபி ஸ்டேடியம் ஆகிய மைதானங்கள் இப்போட்டியில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
கனடா மற்றும் மெக்ஸிகோவில் தலா 10 போட்டிகள் நடைபெறவுள்ளன. 1970 மற்றும் 86 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை நடத்திய மெக்ஸிகோ நகரில் உள்ள ஐகானிக் ஸ்டேடியமான ஆஸ்டெக் ஸ்டேடியம் இப்போட்டி மூலம் மூன்று உலகக் கோப்பைகளில் போட்டிகளை நடத்திய முதல் மைதானம் எனும் சிறப்பைப் பெறவுள்ளது.
போட்டிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:
அமெரிக்கா: நியூயார்க் / நியூ ஜெர்சி (மெட்லைஃப் ஸ்டேடியம்), லாஸ் ஏஞ்சல்ஸ் (சோஃபி ஸ்டேடியம்), டல்லாஸ் (ஏடி&டி ஸ்டேடியம்), சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி (லெவிஸ் ஸ்டேடியம்), மியாமி (ஹார்ட் ராக் ஸ்டேடியம்), அட்லாண்டா (மெர்சிடிஸ்-பென்ஸ் ஸ்டேடியம்), சியாட்டில் (லுமன் ஃபீல்ட்), ஹூஸ்டன் (NRG ஸ்டேடியம்), பிலடெல்பியா (லிங்கன் ஃபினான்ஸியல் ஃபீல்டு), கன்சாஸ் சிட்டி, மிசோரி (அரோஹெட் ஸ்டேடியம்), பாஸ்டன் (ஜில்லட் ஸ்டேடியம்).
மெக்ஸிகோ: குவாடலஜாரா (எஸ்டாடியோ அக்ரான்), மான்டேரி (எஸ்டாடியோ பிபிவிஏ பான்கோமர்), மெக்ஸிகோ சிட்டி (எஸ்டாடியோ அஸ்டெகா).
கனடா: டொராண்டோ (பிஎம்ஓ ஃபீல்ட்), வான்கூவர் (பிசி பிளேஸ்).
-ம.பவித்ரா









