முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாயிகளுக்கு இணையத்தின் மூலம் உடனடி கடன் – புதிய திட்டத்தை தொடங்கியது ஃபெடரல் வங்கி

விவசாயிகளுக்கு இணையத்தின் மூலம் உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை  ஃபெடரல் வங்கி தொடங்கியுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரிசர்வ் வங்கியின் புதுமை
உருவாக்கல் மையம் உருவாக்கிய உடனடி கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை அதாவது
விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை ஃபெடரல் வங்கி தொடங்கி
வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெடரல் வங்கியின் தலைவர்
ஷியாம் சீனிவாசன் , விஜேந்திர பாண்டியன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்று
திட்டத்தை தொடங்கிவைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நேரடியாக ஆதார் அட்டை
உள்ளிட்ட சில ஆவணங்கள் வைத்து இணையத்தின் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். கடன் வழங்கலில் தற்போது இருந்து வரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பீடுகையில் விவசாயிகளுக்கு இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும்.  எளிதில் கடன் பெறக்கூடிய வகையில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத நிலையில் இச்செயல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பெடரல் வங்கியின் தலைவர் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பெடரல் வங்கியின் தலைவர் ஷாம்
சீனிவாசன், விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய ஒரு திட்டமாக இந்த திட்டத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். விவசாயிகள் அவர்களுக்குத் தேவையான கடனை அவர்களிடம் இருக்கும் ஆதார் எண் மற்றும் சிட்டா அடங்களை வைத்து உடனடியாக 5 நிமிடத்தில் கடனை பெற்றுக் கொள்ளலாம். மேலும் 4 சதவீத வட்டியில் கடன் கொடுக்கப்படும் என்றார்.

கடன் பெற்ற விவசாயி மணிகண்டன் பேசுகையில், நாங்கள் கடன் பெறுவதற்கு ஏராளமான வங்கிகளை அணுகினோம். ஆனால், எந்த வங்கியிலும் சரியான
முறையில் பதில் அளிக்கவில்லை. கடன் பெற முடியவில்லை. மேலும்,
பெடரல் வங்கியை அணுகிய பொழுது அவர்கள் 10 நிமிடத்தில் எங்களுக்கு கடனை வழங்கினார்கள் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை

Gayathri Venkatesan

வன்முறையை கட்டவிழ்த்துவிட அதிமுகவினர் திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி

Halley Karthik

அதி வேகமாக வந்த லாரியால் நிகழ்ந்த கோர விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Nandhakumar