குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையையும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டாவது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மெரினாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் வெகுநேரமாக தனியாக அமர்ந்திருந்துள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் துவங்கின. அதில், சிறுமி செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சோ்ந்தவர் என்பதும் இவரது தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், இவரது தந்தை குமார் கஸ்தூரி என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கடந்த ஒரு மாதமாக குமார் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததும் இதற்கு அவரது இரண்டாவது மனைவியும் துணையாக இருந்துள்ளார் என்ற அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கஸ்தூரி போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.