“மெட்ராஸ் ஐ” தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
கண்ணையும் இமையையும் இணைக்கும் பகுதியில் ஏற்படும் ஒரு வகையான வைரஸ் தொற்று, ’மெட்ராஸ் ஐ’ எனப்படுகிறது. காற்றின் வாயிலாகவும், மாசுக்களின் வாயிலாகவும் பரவும் இந்த நோய், ஒரு கண்ணை பாதித்தால், மற்ற கண்ணையும் பாதிக்கும் அபாயம் கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கண் சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் எரிச்சல் உண்டாகுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள், மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும்.
சென்னையில் கடந்த சில நாட்களாக ’மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் ‘மெட்ராஸ் ஐ’ தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக மருத்துவர்கள் கூறுவன:
1.மெட்ராஸ் ஐ தொற்றால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் மற்றும் கைக்குட்டையை உடனடியாக அகற்ற வேண்டும்.
2.தொற்றாளர் பயன்படுத்திய கான்டாக்ட் லென்ஸ்களை மறுபடியும் பயன்படுத்த கூடாது.
3.பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
4.மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.
5.கண்களில் திரவு சுரப்பு முற்றிலும் நிற்கும்வரை, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
6.தொற்றாளரின் தலையணை உறை, ஒப்பனை பொருட்கள், துண்டு போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
7.கண் சிவந்து போயிருந்தால் அது `மெட்ராஸ் ஐ’ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. கருவிழியில் பிரச்னை, கண் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பாகவும் இருக்கலாம்.
8.மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே சுயமருத்துவம் செய்துக்கொள்ளக் கூடாது.
9.மருந்தகங்களில் சுயமாக கண் மருந்துகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது.