ஐகியூ நிறுவனத்தின் நியோ 6 ரக ஸ்மார்ட்போன் வரும் 31ம் தேதி இந்தியச் சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 80W வேகத்தில் சார்ஜ் ஆகிவிடும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்பை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியுள்ளனர்.
சீனாவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் பயன்படுத்தும் சிப் சற்றே மாறுபட்டதாகும். ஐகியூ நியோ 6 எஸ்இ என்ற பெயரிலும் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டார்க் நோவா மற்றும் சைபர் ரேஜ் வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும். 1080p AMOLED திரையுடன் கூடிய இந்த போன் 6.62 இன்ச் திரை அளவைக் கொண்டிருக்கும். செல்பி கேமரா 16எம்பி திறன் கொண்டது. பின்புற கேமரா 64எம்பி திறன் கொண்டது. 3 கேமராக்களைக் கொண்டிருக்கும். மெயின் கேமராக 64எம்பி, இரண்டாவது கேமரா 12எம்பி அல்ட்ராவைடு, மூன்றாவது கேமரா 2எம்பி டெப்த் கொண்டிருக்கும். ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த போன் செயல்படும். 12ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. பேட்டரி 4,700mAh திறன் கொண்டதாகும். 80W என்பது 19 நிமிடங்களில் சார்ஜ் செய்யக் கூடிய திறன் கொண்டதாகும்.







