கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன் ஆறு சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் செலுத்த வேண்டிய 12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டபேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது, நகைக்கடன் பெற்று விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் வரை அடகு வைத்து கடன் பெற்றவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.







