ஃபர்ஹானா திரைப்படம், நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று – செல்வராகவன்

ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படம், என் வாழ்க்கையில் நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று என்று இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ்,…

ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படம், என் வாழ்க்கையில் நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று என்று இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பர்ஹானா. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளிவரும் எத்தனையோ திரைப்படங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள இப்படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் படத்துக்கு தடை கோரி குரல்கள் எழுப்பியுள்ளன.

இந்த நிலையில், ஃபர்ஹானா திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரானது இல்லை என படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருவதாகவும், நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

எந்த பெண்ணும் சந்திக்காத பிரச்னையை கூறும்படமான இத் திரைப்படத்தினை  மேலும் வலுப்படுத்தும் விதமாக, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள செல்வ ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில்.ஃபர்ஹானா திரைப்படம் குறித்த பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்க்கையில் நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ள அவர், நெல்சன் வெங்கட் இப்படத்தை மிக அழகான ஒரு படைப்பாக எடுத்துள்ளார். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.