‘Over Confident’ என விமர்சிக்கும் ரசிகர்கள்…வைரலாகும் பேட் கம்மின்ஸின் பழைய வீடியோ!

டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி…

டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து,  தென்னாப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில்,  ஆஸ்திரேலியா,  மேற்கத்திய தீவுகள் சூப்பர் 8 சுற்றுடனும், நியூசிலாந்து பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடனும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியுள்ள நிலையில் சூப்பர் 8 சுற்றிற்கு செல்லும் முன் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,

“உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகளின் பெயரை கம்மின்ஸிடம் பேட்டியின் தொகுப்பாளர் கேட்டிருப்பார்.

அதற்கு பதிலளித்த கம்மின்ஸ் “கண்டிப்பாக ஆஸ்திரேலியா இருக்கும், மற்ற 3 அணிகள் குறித்து எனக்கு கவலையில்லை (Dont Care)”  எனக் கூறியிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறியுள்ள நிலையில், இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.