மதுரவாயலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை… கொலையாளிகளுக்கு போலீஸ் வலை!…

மதுரவாயலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  கொலையாளிகளை  போலீஸார் தேடி வருகின்றனர்.  மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியை சேர்ந்தவர் கேங்சரவணன்(32), இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள…

மதுரவாயலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  கொலையாளிகளை  போலீஸார் தேடி வருகின்றனர். 

மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியை சேர்ந்தவர் கேங்சரவணன்(32),
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் நேற்று இரவு வானகரம்
பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கேங் சரவணனை வழிமறித்து சரமாரியாக வெட்டியது இதில் கேங் சரவணன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கினார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது. இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்த கேங் சரவணன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கேங் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் கேங் சரவணன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கேங் சரவணன் மயிலாப்பூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்த நிலையில் ஏற்கனவே பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமாருக்கு எதிராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.