முக்கியச் செய்திகள் செய்திகள்

புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா!

மாசி பச்சை பெட்டி திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலக புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவில் மாசி பச்சை திருவிழாவை முன்னிட்டு அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய ஐந்து பெட்டிகள் கோவில் திருவிழாவிற்காக பாப்பாபட்டிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று திருவிழாவின் இறுதிநாளில் பாப்பாபட்டியிலிருந்து உசிலம்பட்டி சின்னக் கருப்பசாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த பெட்டிகள் வடகாட்டுப்பட்டியிலிருந்து ஊர்வலமாக உசிலம்பட்டி நோக்கி வரும் போது காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் ஆதிவழக்கத்தையும், பாதாள கட்டை ஏறி ( ஆணி செருப்பில் ஏறி ) இரு பூசாரிகள் ஊர்வலமாக வரும் நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் உசிலம்பட்டியில் குவிந்து மாசி பெட்டியின் தரிசனம் பெற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் திறப்பு

Web Editor

அடுத்த பிரதமர் யார் என்பதை முதல்வர் ஸ்டாலினால் கூற முடியும்-அமைச்சர் அன்பில் மகேஸ்

Web Editor

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

G SaravanaKumar