பிரபல ஒளிப்பதிவாளரும், புகைப்படக் கலைஞருமான அயர்லாந்தை சேர்ந்த ரோஸ் மெக்டோனல் அமெரிக்கா சென்ற நிலையில் மர்மான முறையில் காணாமல் போனார்.
ரோஸ் மெக்டோனல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காணாமல் போனாதாக கூறப்படுறது. இந்த நிலையில் 44 வயதான இவர், குயின்ஸ் கடற்கரையில் கடைசியாகக் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஸ் மெக்டோனலை நியூயார்க் நகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவர் 2021-க்கான தி டிரேடு என்னும் தொடருக்கான சிறந்த ஒளிப்பதிவுக்கான எம்மி விருது உள்ளிட்ட பல புகழ்மிக்க சர்வதேச விருதுகளை பெற்று கவனம் ஈர்த்தவர். பயண விரும்பியான இவர் அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பதோடு, சர்வதேச அளவில் கலைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







