முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி உடல் நலக்குறைவால் காலமானார்

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். தாவணி கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தூள், வீரம், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மயில்சாமிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வசித்து வரும் இவர் நெஞ்சு வலி காரணமாக இன்று காலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனை சென்ற பிறகு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது இறப்புக்கு ரமேஷ் கண்ணா, மனோ பாலா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களைக் கொண்டவர்.
இவரின் திடீர் மறைவு திரைத்துறையினர், மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ.400-க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் 20 கோடி இந்தியர்கள்!

EZHILARASAN D

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

EZHILARASAN D

3 மணி நேர போராட்டத்திற்கு பின் வட மாநில இளைஞரை மீட்ட காவல்துறை

Web Editor