வீட்டில் பூனை வளர்க்க எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர் ; இளம்பெண் தற்கொலை…….!

ஹைதாராபாத்தில் வீட்டில் பூனை வளர்க்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 23 வயது மருத்துவ பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் அல்வால் பகுதியை சேர்ந்தவர்  பிரின்சி (எ) ஸ்ரேஷ்டா. 23 வயதாகும் பிரின்சி சமீபத்தில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து, முதுகலைப் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார்.

இந்த சூழலில் அண்மையில் பிரின்சி, பூனை ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் பூனை வீட்டில் இருப்பது ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக கூறி குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தொடர்ந்து வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பிரின்சி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரின்சியின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரின்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது ;

குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட வேலைக்காக வெளியே சென்றிருந்த போது பிரின்சி தனது குடியிருப்பில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பிரின்சி மதிய உணவு சாப்பிட்டாளா என்று பார்க்க அவளது பெற்றோர் அழைத்தார்கள், ஆனால் அவர் பதிலளிக்காததால், அவர்கள் அக்கம்பக்கத்தினரை வீட்டிற்கு சென்று பார்க்கச் சொன்னார்கள். அப்போது ஹாலில் உள்ள மின்விசிறியில் பிரின்சி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரின்சி பிரின்சி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பூனையை வளர்க்க அனுமதிக்கப்படாததால் பிரின்சி மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் குடும்பத்தினர் தங்களது  புகாரில் கூறியுள்ளனர். தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. நாங்கள் பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் பிரிவு 194-ன் (சந்தேகத்திற்கிடமான மரணம்) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.