பாலியல் வன்கொடுமை: மாணவி உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எட்டாம் வகுப்பு மாணவி, உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியை சேர்ந்த மர வியாபாரியான மணிகண்டனின் மகள் சரளா…

விழுப்புரம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எட்டாம் வகுப்பு மாணவி, உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியை சேர்ந்த மர வியாபாரியான மணிகண்டனின்
மகள் சரளா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திருவக்கரை பகுதியில்
வசிக்கும் லாரி ஓட்டுனரான பாண்டியனுக்கும் எட்டாம் வகுப்பு மாணவிக்கும்
பழக்கம் ஏற்பட்டு நேற்றைய முந்தினம் 24 ஆம் தேதி மாலையில் மாணவியிடம்
அத்தூமீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இச்சம்பவம் அவரது பெற்றோருக்கு தெரிய வரவே இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்த போலீசார் லாரி ஓட்டுனரான பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தொடர்ச்சியான மன உளைச்சலில் இருந்த மாணவி சரளா தன் வீட்டின் அருகே உள்ள கல் குவாரி குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.