” புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் ” – அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் நுகர்வோர்களுக்கு கால அவகாசம் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் மிக்ஜாம் புயலால்…

மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் நுகர்வோர்களுக்கு கால அவகாசம் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதனால், நான்கு மாவட்ட மக்களுக்கும் அபராதத்தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்துவதில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 7ந்தேதி கடைசி நாள் என்று இருந்த நிலையில், தற்போது அபராதத் தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மின் உபயோகிப்பாளர்கள் டிசம்பர் 4ந்தேதி முதல் டிசம்பர் 6ந்தேதி வரை மின் கட்டணத்துடன் அபராதத் தொகை செலுத்தி இருந்தால் அந்த அபராத தொகை அடுத்த மாத மின்கட்டணத் தொகையில் ஈடுசெய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.