முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் எதிரொலி: பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிக்கப்படுவதாகவும், புதிய
நடைமுறை நடப்பு செப்டம்பர் மாதமே அமலுக்கு வருவதாகவும் பள்ளிக் கல்வித் துறை
அறிவித்துள்ளது.

நியூஸ்7 தமிழ் செய்தி வலைத்தளத்தில் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்துமாறு சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 59-ல் இருந்து
60-ஆக உயர்த்தப்பட்டது.

ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நிலை அரசுப்பள்ளிகளில்
தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதிநேர
ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ஆகவே இருந்து வந்தது.

இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள்,
பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயர்த்தப்படுவதாகவும், புதிய நடைமுறை நடப்பு செப்டம்பர் மாதமே அமலுக்கு வருவதாகவும் பள்ளிக் கல்வித் துறை
அறிவித்துள்ளது.

2012-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் பலர் பணி விலகிய
நிலையில், தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி
வருகின்றனர்.

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி
அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை
பகுதி நேர ஆசிரியர்கள் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை; அரவிந்த் கெஜ்ரிவால்

G SaravanaKumar

விவாகரத்து குறித்த வதந்தி; மனம் திறந்த சமந்தா

G SaravanaKumar

புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Dinesh A