கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்தானது, கேட் கீப்பரின் கவன குறைவால் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.







