தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், செப்டம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் கன மழை தொடரும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், செப்டம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் கன மழை தொடரும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று பரவலாக இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது எனவும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், வளிமண்டல சுழற்சியின் காரணமாக தொடர்ந்து செப்டம்பர் ஐந்தாம் தேதி வரையிலும் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.