ஏற்றுமதி வரி விதிப்பிலிருந்து பெங்களூர் ரோஸ் வெங்காயத்துக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் வெங்காயம் தாராளமாகக் கிடைக்கச் செய்வதற்காக, அனைத்து வெங்காய வகைகளுக்கும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 40% ஏற்றுமதி வரி விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வரியிலிருந்து பெங்களூர் ரோஸ் வெங்காயத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூர் ரோஸ் வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி ரத்து செய்யப்படுகிறது. அது பெங்களூர் வெங்காயம்தான் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – காங். எம்பி ராகுல் காந்தி வரவேற்பு!!
பெங்களூர் ரோஸ் வெங்காயத்துக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளதால், வெங்காய ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மற்ற ரக வெங்காயத்துக்கும் இதே போல் வரி விலக்கு அளிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளனர்.