இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் பாதுகாப்பு அம்சங்கள் கூடிய கூகுள் ஹெச்பி கணினி கிடைக்கும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஸ்ரீபெரும்புதூர் ‘ஃப்ளெக்ஸ் தொழிற்சாலை வளாகத்தில், ஹெச்பி நிறுவனத்தின் மடிக்கணினிகள், தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஹெச்பி நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது.
அதன்படி கூகுளின் இயங்குதளம் (ஓ.எஸ்.) கொண்ட இலகுரக மடிக்கணினியான ‘க்ரோம்புக் தயாரிப்பை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ஹெச்பி நிறுவனம் மேற்கொள்ளும்.
இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுநதர் பிச்சை எக்ஸ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
இந்தியாவில் க்ரோம்புக் தயாரிப்பதற்கு HP நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்துள்ளோம். இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் க்ரோம்புக் ஆகும். இந்த புதிய வகை க்ரோம்புக் ஆனது AI-இயங்கும் கருவிகள், 1080p கேமரா, Adobe Photoshop + 2x செயலாக்க சக்தியைக் கொண்டுள்ளது.
க்ரோம்புக்கில் இதுவரை நாங்கள் செய்த மிகப்பெரிய மாற்றம். இந்திய மாணவர்களுக்கு மலிவு மற்றும் பாதுகாப்பான கணினியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.







