வெளிநாடு வாழ்இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி; புகார்களை தடையின்றி பதிவு செய்ய தமிழ்நாடு காவல்துறை ஏற்பாடு!

வெளிநாடு வாழ்இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி  இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.  வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக, சென்னை மெரீனா காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில்…

வெளிநாடு வாழ்இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி  இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. 

வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக, சென்னை மெரீனா காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும் தங்களது புகார் மனுக்களை இப்பிரிவுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் புகார்களைத் தடையின்றிபதிவு செய்வதற்கு ஏதுவாக, காவல்துறை சார்பில் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த பிரத்யகை செய்தி இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. தமிழக காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாநகர மற்றும் மாவட்ட காவல் துறைக்கு விசாரணைக்கு அனுப்பப்படும்.

இதனை https://eservices.tnpolice.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.