கலால் கொள்கை வழக்கு – ஜூலை 3 வரை கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சட்டவிரோத…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக,  முன்னாள் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகளும்,  பிஆர்எஸ் தலைவருமான கவிதா கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி பலமுறை மனுத்தாக்கல் செய்த நிலையில்,  அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அவரின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இந்நிலையில் அவரின் நீதிமன்ற காவலை ஜூலை 3 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளவரசன்,  தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  ஆனால் தொடர்ந்து கவிதாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.