ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

மறைந்த காங். மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் முகலிவாக்கம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்…

EVKS Elangovan's body cremated with state honors!

மறைந்த காங். மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் முகலிவாக்கம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.14) காலை காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேற்று பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இறுதி ஊர்வலம் இன்று (டிச.15) மாலை தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மணப்பாக்கம் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட , ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முகலிவாக்கம் மின் மயானத்தில் வைக்கப்பட்டு மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தப்பட்ட பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.