“எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்”… அபுதாபியில் தொடங்கும்  ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்? -கொண்டாட்டத்தில் AK ரசிகர்கள்!!!

 ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் வரும் அக். 4ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.              தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில்…

 ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் வரும் அக். 4ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.             

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.இப்படியான சூழ்நிலையில்,  சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபு தாபியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் வரும் அக். 4ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.