ஹரியாணா மாநில முதலமைச்சர் மனோகர் லால் பாதுகாப்பு வீரர்கள் பின்தொடர பைக் ஓட்டிச்சென்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஹரியாணா மாநில நிர்வாக தலைநகரமாக கர்னல் உள்ளது. இந்த மாவட்டத்தில் அவ்வப்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
https://twitter.com/i/status/1706526297227468812
அதன் ஒரு பகுதியாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களுக்கு வரும் அரசு ஊழியர்கள் சைக்கிளில் வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஹரியாணா மாநில முதலமைச்சர் மனோகர் லால் இன்று காலை வீட்டிலிருந்து கர்னல் விமான நிலையம் வரை புல்லட் ஓட்டிச் சென்றார். அவரை இருசக்கர வாகனங்களில் பாதுகாவலர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.







