சுஹாசினியும் ஸ்ரீகணேஷும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்து பின் காதலித்து வந்துள்ளனர். பின் இரு வீட்டாரின் முன்னிலையிலும் இருவர்களின் திருமணம் நேற்று நடந்து முடிந்தது.
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்ரீ கணேஷ் அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் 2019-ம் ஆண்டு அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் திரைப்படத்தினை தொடங்கினார். ஆனால் சில பல காரணங்களால் இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின் பல தடைகளைத் தாண்டி குருதி ஆட்டம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படமும் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் திரைப்படம் கடந்த வாரம் ஆஹா OTT தளத்தில் வெளியாகி பலரிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் இயக்குநர் ஸ்ரீகணேஷும், நாடகக் கலைஞரும், நடிகையுமான சுஹாசினி என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீண்ட நாள் நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பின் இரு வீட்டாரின் முன்னிலையிலும் இருவரிகளின் திருமணம் நேற்று நடந்து முடிந்தது.திருமணம் முடிந்த மாலை உறவினர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட ஸ்ரீகணேஷின் திரையுலக நண்பர்கள் மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.