ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதிமுக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் மற்றும் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று அதிமுக வின் தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் அங்கு 4முனைப் போட்டி நிலவுகிறது.
96 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 10-ந்தேதி கடைசிநாளாகும். நேற்று மட்டும் ஒரே நாளில் 27 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
– யாழன்