ஈரோடு இடைத்தேர்தல்; தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேட்பாளர் அறிமுகம்

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்  வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா ஜனவரி 4ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் .…

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்  வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா ஜனவரி 4ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் . இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது .

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் களம்
சூடு பிடிக்க தொடங்கியுள்ளது . அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளிடையே வேட்பாளர் தேர்வு குறித்தும், ஆதரவு குறித்தும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் தேசிய
ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது .
கூட்டணி கட்சியின் வேட்பாளராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவரும்  ஈரோட்டில்
விவசாயம் செய்து வாழ்ந்து வரும், கரும்புலி கண்ணன் என்பவர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோட்டில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதால் அதிலிருந்து  வெளியேற்றப்படும் கழிவுநீர் முழுவதும் காவிரி ஆற்றில் கலக்கப்படுவதை தடுப்போம் எனவும்  நீரின் தன்மை முழுவதும் மாசடைந்து வருவதால்  அதனை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் வாக்குறுதியாக  தமிழ் தேசிய ஜனநாயக கூட்டனி தெரிவித்துள்ளது.

மேலும் வடமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து அவர்களுடைய ஆதிக்கம்
அதிக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழர்களுக்கு வேலை
வாய்ப்பு இல்லாமல் அன்றாட உணவிற்கு அல்லல்படும் நிலை உள்ளது அதனை  தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றும்  வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.