இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 1 ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84.5 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் 146 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனை புரிந்தார்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி 61.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களை எடுத்தது இங்கிலாந்து. அந்த அணியின் பேர்ஸ்டோ சதம் பதிவு செய்து அசத்தினார்.
இதையடுத்து, 132 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியாது. அதில் 245 எடுத்து ஆட்டமிழந்தது. புஜாரா, ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 
இதையடுத்து, 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இங்கிலாந்து அணி 4 வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு இன்னும் 119 ரன்கள் தேவை. 3 விக்கெட்டை மட்டுமே அந்த அணி இழந்துள்ளதால் இன்றைய 5வது நாள் ஆட்டத்தில் 119 ரன்களை எளிதில் எடுத்துவிடும் என்று கருதப்படுகிறது. எனவே,இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி, ஓ.போப் ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக விளையாடி களத்தில் நிற்கின்றனர. இருவருமே அரை சதம் பதிவு செய்து உறுதியுடன் நிலைத்து விளையாடி வருகின்றனர்.







